வியாழ வட்டம் சிறப்பு நிகழ்வு (Viyazha vattam - Special event)
- Organised by : Department of Tamil (Sf)
- Date : 04/02/2025
- Time : 02.00 AM - 04.00 PM
- Venue : Department of Tamil (SF), C.P.A College,
- Type : Guest Lecture
58 வது வியாழ வட்டம் சிறப்பு நிகழ்வு
கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் காலேஜ் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவில் நடைபெற்ற வியாழ வட்டத்தின் 58 வது சிறப்பு நிகழ்வின் அழைப்பாளராக கவிஞர் சோ. பஞ்சுராஜா, நிறுவனர் நேதாஜி அறக்கட்டளை, தேனி மாவட்ட வரலாற்று ஆய்வுமைய தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். அவர் தம் சிறப்புரையில் தேனி மாவட்ட வரலாற்றுச் சுவடுகள் மக்களால் அறியப்படாமலே இருக்கின்றது. வருங்கால ஆய்வாளர்களாகிய நீங்கள் தான் தேனி மாவட்ட வரலாற்றினையும், சிறப்புக்களையும் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் எனக்கூறினார். வியாழ வட்ட நிகழ்வில் தமிழ்த்துறை மாணவிகள் மூன்றாமாண்டு தேன்மொழி, இரண்டாமாண்டு அபிநயா மற்றும் முதலாமாண்டு காவியா ஆகியோர் வைரமுத்து கவிதைகள், பாரதியார் பாடல்கள், சிறுகதை விமர்சனம் ஆகியனவற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர். நிகழ்வினை முதலாமாண்டு மாணவிகள் ருத்ரா மற்றும் யுவஶ்ரீ ஆகியோர் மிகச்சிறப்பாகத் தொகுத்து வழங்கினர். பேராசிரியர் முனைவர் பா.அங்கயற்கண்ணி தொகுப்பாளர்களுக்கு சிறப்பானதொரு பயிற்சிதந்து நிகழ்வு சிறப்புடன் அமைந்திட வழிவகை செய்தார்.
இந்நிகழ்வினை கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைக்க; துறைப்பேராசிரியர் முனைவர் பால்பாண்டி அவர்கள் நிகழ்வு நோக்கவுரையும், பேராசிரியர் மாசிலாமணி அவர்கள் நன்றியுரையும், கௌரவ விரிவுரையாளர் ரேணுகாதேவி அவர்கள் நன்றியுரையும் வழங்கினர். பேராசிரியர் தனலெட்சுமி மற்றும் மாணவர்கள் இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினைச் சிறப்பாக செய்திருந்தனர்.
Report

Resource Person(s)
கவிஞர் சோ. பஞ்சுராஜா
நிறுவனர் நேதாஜி அறக்கட்டளை மற்றும்
தேனி மாவட்ட வரலாற்று ஆய்வுமையத் தலைவர்,
கம்பம் - தேனி மாவட்டம்.
Organising Committee
தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு