Suruli Charal festival - 2024 (சுருளி சாரல் விழா - 2024)

  • Organised by : Administration of Theni District and Tourisum Department -Theni.
  • Date : 28/09/2024 - 02/10/2024
  • Venue : Suruli Falls, Kumbam
  • Type : Festival
  • Level : State Level

Suruli Charal festival - 2024 (சுருளி சாரல் விழா - 2024) 28.09.2024 - 02.10.2024

தேவராட்டம் ஆடிய நமது கல்லூரி தமிழ்த்துறை மற்றும் பிறதுறை  மாணவர்கள்.

தங்களது அசாத்திய திறமையினால் கரகாட்டக் கலையை பலரும் பாராட்டும் வண்ணம் வெளிப்படுத்திய வணிகக் கணினிப் பயன்பாடு மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள்.

தமிழரின் பாரம்பரிய நடனமான கட்டக்கால் ஆட்டதை மிகச்சிறப்பாக ஆடிக்காட்டி மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமான தமிழ்த்துறை மற்றும் பிறதுறை சார்ந்த மாணவர்கள்.

டிரம்ஸ் தாளக் கலையில் வல்லவர்களாகிய எமது கல்லூரி மாணவர்களின் சிறப்பான இசைக்கூத்து. அனைவரது பாராட்டுக்களையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த தருணம்.

ஆடாதோடா இயற்கைக் குடிநீர் மற்றும கபசுரக் குடிநீர் ஆகியனவற்றை அறுந்தி மகிழ்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள். உடன் தேனி மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அவர்கள்.

மேடையேறிய மாணவர்கள் மற்றும் வழிநடத்திச் சென்ற பேராசிரியர்கள் தேனி மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியுடன் எடுத்துக் கொண்ட அழகிய குழுப் புகைப்படம்.

தங்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி பலருடைய பாரட்டுக்களையும் பெற்ற மகிழ்ச்சியில் தமிழ்த்துறை மற்றும் பிறதுறை மாணவர்களின் குழுப் புகைப்படம். கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களாக மாறிய தருணம்.

சுருளி சாரல் விழா -2024 நிகழ்விற்காக இயற்கையாக விளைந்த  காய்கறிகளைக் கொண்டு  வடிவமைக்கப்பட்ட தோரண வாயிலின் முன்பாக பேராசிரிய வழிகாட்டிகள் முனைவர் இரா.கபேஷ், முனைவர் நா.பால்பாண்டி மற்றும் பேராசிரியர் ஜெகதீஸ் ஆகியோர்.
 

Report

தமிழ்நாடு அரசு, தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேனி சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய இந்த ஆண்டிற்கான  "சுருளி சாரல் விழா - 2024" நிகழ்வு 28.09.2024 முதல் 02.10.2024 வரை நடைபெற்றது. தேனி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்தால் வருடந்தோறும் நடைபெறும் நிகழ்வில் கடந்தை ஆண்டினைப் போன்று இவ்வாண்டும் நமது கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் பிறதுறை மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினர். மூன்றாம் நாள் நிகழ்வில் பங்கெடுத்த நம் கல்லூரி மாணவர்கள் தேவராட்டம், கரகாட்டம், கட்டக்கால் ஆட்டம் மற்றும் டிரம்ஸ் தாளம் வாசித்தல் என மிக அழகாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சுருளி விழாவினைக் காணவந்த சுற்றுலா வாசிகள் தங்களது கண்கள் மற்றும் காதுகளுக்கு இனிமையான இசை மற்றும் நடனக் காட்சிளை கண்டு இன்புற வாய்பளித்தமைக்காக மாணவர்களுக்கும், கல்லூரிக்கும், பேராசிரியர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மற்றுமின்றி  மாணவர்களின் திறமைகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இச்சாரல் சுற்றுலாவிற்கு வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் இரா.கபேஷ், தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் நா.பால்பாண்டி மற்றும் வணிக நிர்வாகவியல் பேராசிரியர் ஜெகதீஸ் ஆகியோர் மாணவர்களை வழிநடத்திச் சென்றனர்.

Organising Committee

Administration of Theni District and Tourisum Department -Theni.