One day Feild work for Tamil Department Students (தமிழ்த்துறை மாணவர்களுக்கான ஒருநாள் நேரடிக் களாய்வுப் பயிற்சி)

  • Organised by : Government of Tamilnadu, Department of Museium, Andipatti, Theni Dt. and Department of Tamil(SF) C.P.A College, Bodinayakanur
  • Date : 02/08/2025
  • Time : 10:30 AM - 02:30 PM
  • Venue : Kongar Puliankulam - Chekkanoorani -Madurai
  • Type : Field Visit

தேனி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் காலேஜ் இணைந்து மாணவர்களுக்கான ஒருநாள் நேரடி களஆய்வு பணி நிகழ்வானது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 01.08.2025 வெள்ளிக்கிழமை அன்று மதுரை மாவட்டம் செக்காணூரனிக்கு  அருகில் 3கி.மீ தொலைவில் உள்ள கொங்கர் புளியங்குளம் தேர்வு செய்யப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க சமணர் படுக்கைகள் பராமரிப்பு மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டு படியெடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. 10.30 மணியளவில் தொடங்கிய நிகழ்வில் "வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பு" எப்படி என்னும் தலைப்பில் தேனி மாவட்ட அருங்காட்சியக காப்பாளர் முனைவர் மருதுபாண்டியன் அவர்கள் தெளிவாக உரையாற்றினார். அதன்பின்பு மாணவர்களுக்கான வினாக்களுக்கு காப்பாட்சியர் விளக்கம் அளித்தார். 11.45 மணியளவில் நடைபெற்ற தமிழ் பிராமி படியெடுத்தல் நிகழ்வினை வரலாற்று ஆய்வாளரும் முனைவருமான உதயகுமார் அவர்கள் நேரடியாக படியெடுத்துக் காண்பித்தார். படியெடுப்பதன் முக்கியத்துவம் அதில் உள்ள சிரமங்கள் என பலவற்றையும்  நேடியாக செய்து காண்பித்தார். மாணவர்கள் அனைவரும் மிக ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மேலும் சமணர் மலையில் உள்ள தீர்த்தங்கர்கள் புடைப்புச் சிற்பம் மற்றும் பாறை ஓவியங்கள் பொறிக்கப்பட்ட இடங்கள் காண்பிக்கப்பட்டன. மதியம் 2.30 மணியளவில் களஆய்வுப் பணியானது இனிதே நடந்து முடிந்தது. உணவு இடைவெளிக்கு பிறகு களாய்வின் ஒருபகுதியாக வரலாற்று புகழ்மிக்க நாயக்கர் கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மன்னர் திருமலைநாயக்கர் மஹால் சுற்றிக் காட்டப்பட்டது. மாணவர்களுக்கு தமிழ்த்துறைப் பேராசிரியர்களால் அதன் வரலாறுஇ காலம் போன்றன சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. இறுதியாக 4.00 மணியளவில் அனைவரும் களாய்வு பணி முடிவடைந்து வீடுதிரும்பினர்.

Resource Person(s)

ஆண்டிபட்டி அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் உதயகுமார் ஆகியோர்.

Organising Committee

Government of Tamilnadu,
Department of Museium,
Andipatti, Theni Dt.
and 
Department of Tamil(SF)
C.P.A College, Bodinayakanur

Documents

Gallery