International Conference on "Human Ethics and Values in Tamil Literature தமிழிலக்கியங்களில் மானுட வாழ்வியலும் மதிப்புகளும்"

  • Organised by : Depatyment of Tamil (SF)
  • Date : 24/01/2025
  • Time : 10:00 AM
  • Venue : C.P.A College, Sri Subburaj Memorial AC Hall
  • Type : Conference
  • Level : International Level

தமிழிலக்கியங்களில் மானுட வாழ்வியலும் மதிப்புகளும் (Human Ethics and Values in Tamil Literature )

 

Report

தமிழிலக்கியங்களில் மானுட வாழ்வியலும் மதிப்புகளும் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

    கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் காலேஜில் 24.01.2025 அன்று தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு நடத்திய ‘தமிழிலக்கியங்களில் மானுட வாழ்வியலும் மதிப்புகளும்’ என்னும் தலைப்பில் பன்னாட்டு (இண்டர்நேஷனல்) அளவிலான கருத்தரங்கு ஸ்ரீ சுப்புராஜ் நினைவு குளிர் அரங்கில் வைத்து நடைபெற்றது. இக்கருத்தரங்கினை கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் புருஷோத்தமன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தலைமையேற்று நடத்திக் கொடுத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் அவர்கள் முன்னிலை வகிக்க, சுயநிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் அவர்கள் கருத்தரங்க தொடக்கவுரை வழங்கினார். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமங்கலம் கப்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் சிங்காரவேலன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் மாணவர்கள் மானுடச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை இளந்தலைமுறையினர் உணர்ந்து கொண்டால் மட்டுமே வருங்காலங்களில் தமிழிலக்கியங்களில் படைப்புகளை அதிகப்படுத்த முடியும். அதனால் மட்டுமே நம் தாய்த்தமிழ் மொழியை வளர்த்தெடுக்க முடியும் என எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் தமிழ் மற்றும் பல்வேறு துறைசார்ந்த பேராசிரியர்களும், அறிஞர்களும் பங்கேற்று அவர்தம் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தளித்தனர். மேலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 43 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கியிருந்தனர். கட்டுரைகள் அனைத்தும் தொகுத்து புத்தகமாக்கி கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.  இக்கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரையும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பால்பாண்டி அவர்கள் வரவேற்க, உதவிப்பேராசிரியர் தனலட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கருத்தரங்க ஏற்பாட்டினை துறைப்பேராசிரியர்கள் மாசிலாமணி, முனைவர் அங்கயற்கண்ணி, ரேணுகாதேவி ஆகியோர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

Resource Person(s)

முனைவர்பா. சிங்காரவேலன்

இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

தமிழ்த்துறை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கப்பலூர் திருமங்கலம் மதுரை - 625 008.

தமிழ்நாடு.

 

Organising Committee

Department of Tamil (SF)

Cardamom Planters' Association College

Bodinayakanur

Documents

News Paper Clips

Gallery