Inter-College Art Festival Competitions - Students Win the Overall Trophy (கல்லூரிகளுக்கு இடையிலான கலை விழாப் போட்டிகள் - சிறந்த கல்லூரிக்கான சுழற்கோப்பை வென்ற மாணவர்கள்)
- Organised by : Department of Tamil, Theni Kammavar Sangam Art and Science College,
- Date : 14/03/2025
- Time : 10.00 AM - 04.00 PM
- Venue : Seminar Hall, Theni Kammavar Sangam Art and Science College,
- Type : College Events
- Level : District Level
Inter-College Art Festival Competitions - Students Win the Overall Trophy - (கல்லூரிகளுக்கு இடையிலான கலை விழாப் போட்டிகள் - சிறந்த கல்லூரிக்கான சுழற்கோப்பை வென்ற மாணவர்கள்!)
தேனி கம்மவார் சங்கக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்லூரிக் கூடல் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த 12 கல்லூரிகள் தங்களது மாணவ அணிகளுடன் கலந்து கொண்டன. ஏற்பாடு செய்யப்பட எட்டு வகையான போட்டிகளில் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் காலேஜ் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர். கோலப் பேட்டி, தனிநபர் நடிப்பு போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடமும் கிராமிய நடனப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த கல்லூரிக்கான சுழல் கோப்பையும் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டிகளில் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மாணவர்கள் விஷ்ணு மற்றும் லோகேஷ் குமார் ஆகியோர் தமிழ் வினாடி - வினா போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி செயலாளர் திரு புருஷோத்தமன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் அவர்கள் செய்து கொடுகக; மாணவர்களை தமிழ்த்துறைத் தலைவர் சுயநிதிப்பிரிவு முனைவர் பால்பாண்டி அவர்கள் வழிநடத்திச் சென்றார்.
Resource Person(s)
Dr. Sumathi
Assistant Professor
School of Tamil
Madurai Kamaraj University Campus
Madurai
