Ilaiyor Ilakkiya Pasarai (இளையோர் இலக்கியப் பாசறை ' 19. 02.24 ( திங்கள் கிழமை) )

  • Organised by : Tamil valarchi Durai - Theni District.
  • Date : 19/02/2024
  • Time : 10:30 AM - 05:30 PM
  • Venue : Haji Karutharavuthar Howdhiya College, Uthamapalayam
  • Type : Workshop
  • Level : State Level

இளையோர் இலக்கியப் பாசறை - 19.02.24 

தமிழ்த்துறைக்கு (சுயநிதிப்பிரிவு) அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிதழ்

பயிற்சி வகுப்பின் நிகழ்ச்சி நிரல்.

இளையோர் இலக்கியப் பாசறை தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணை.

Report

தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரி இணைந்து நடத்திய "இளையோர் இலக்கியப் பாசறை" பயிற்சி வகுப்பு 19.02.2024 அன்று கல்லூரி கருத்தரங்கில் வைத்து நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர் முனைவர் முகமது சமீம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிற்சி வகுப்பின் நோக்கம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் விரிவாக தனது கவிதை வரிகளால் விளக்கிக் கூறினார். கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகம்மது மீரான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். "செம்மொழித் தமிழின் சிறப்பு" என்னும் தலைப்பில் மிக அழகாக தமிழின் இயல்புகளை எடுத்துக் கூறினார் மதுரை நூலகத்துறையைச் சார்ந்த திரு.திருநாவுக்கரசு அவர்கள். அதனைப் போலவே "மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்" என்னும் தலைப்பில் திரைப்பட பாடலாசியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களும்; "புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும் " என்னும் தலைப்பில் கல்லூரித் தமிழ்த்துறைப் போராசிரியர் முனைவர் முகமது ரபீக் அவர்களும், "நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்" என்னும் தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளரும், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் பெ.முருகன் அவர்களும் சிறப்புரையாற்றினார். "கண்களைத் திறந்த கதை உலகம்" என்னும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சொந்த அனுபவத்தில் விளைந்த திரைக்கதைகள் பற்றி மிக அழகாக எடுத்துக் கூறினார். இறுதியாக கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் விழா உரை குறித்த தங்களது கருத்துக்களை மிக நுட்பமாக எடுத்துக் கூறினர்.  இப்பயிற்சி வகுப்பில் எங்களது தமிழ்த்துறையைச் சேர்ந்த மாரிதா. எம், பவிதா.எம், ரேஹா. ஏ, முனீஸ்வரி. ஆர், வைஷ்ணவி. கே ஆகிய மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.பால்பாண்டி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வழிநடத்திச் சென்றார்.

Resource Person(s)

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய சிறப்புரையாளர்களின் பெயர் பட்டியல் அடங்கிய நிகழ்ச்சி நிரல்.

Organising Committee

தமிழ் வளர்ச்சித்துறை

இளையோர் இலக்கியப் பாசறை

தேனி மாவட்டம் 

மற்றும் 

ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரி - உத்தமபாளையம்.