"GRAND LUMINA" (Inter-School Competitions - 2026)
- Organised by : CPA College
- Date : 21/01/2026
- Venue : CPA College Campus
- Type : Cultural Events
- Level : District Level
கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரி, போடிநாயக்கனூர் சார்பில்
“The Grand Lumina – Inter-School Competitions 2026” என்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் 21.01.2026 அன்று எங்கள் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு மாணவர்களின் திறமை, சுயநம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாபெரும் விழாவில் 22 பள்ளிகள் பங்கேற்றன. அதில் 421 ஆண் மாணவர்கள், 301 பெண் மாணவர்கள் என மொத்தம் 722 மாணவ, மாணவியர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், மாணவர்களை வழிநடத்தி உறுதுணையாக இருந்த 67 பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் நான்கு முக்கிய பிரிவுகளாக நடத்தப்பட்டன.
முதலாவதாக, கலைப் போட்டிகள் – நாட்டுப் புற நடனம், குறுநாடகம், ரங்கோலி, பென்சில் ஓவியம் போன்ற கலைப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் மாணவர்கள் தங்களின் கலைத் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தினர்.
இரண்டாவதாக, விளையாட்டுப் போட்டிகள் – 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4 x 100 தொடர் ஓட்டம், கைப்பந்து, கபடி போன்ற தனிநபர் மற்றும் குழு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் விளையாட்டு உணர்வுடனும், ஒழுக்கத்துடனும் பங்கேற்றனர்.
மூன்றாவதாக, அறிவியல் கண்காட்சி – புதுமையான அறிவியல் மாதிரிகள்,
சமூகப் பயன்பாட்டை மையமாகக் கொண்ட திட்டங்கள், மாணவர்களின் ஆராய்ச்சி சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
நான்காவதாக, வினாடி வினா போட்டி – பொது அறிவு, அறிவியல், சமகால நிகழ்வுகள்,
தர்க்க மற்றும் சிந்தனைத் திறன் சார்ந்த கேள்விகள் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் சோதிக்கப்பட்டது.
அனைத்து போட்டிகளும் நடுவர் குழுவினரால் நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. கல்லூரி வளாகம் முழுவதும் மாணவர்களின் உற்சாகமும், ஆர்வமும் நிரம்பி காணப்பட்டது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
“Shine Beyond Limits” என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, இந்த The Grand Lumina நிகழ்வு மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து,
அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு நினைவுகூரத்தக்க கல்வி–கலாச்சாரத் திருவிழாவாக அமைந்தது.
