Bharathiyar Memorial Day Seminar - Bharathi oor Acharyakuri - (பாரதி ஓர் ஆச்சர்யக்குறி)
- Organised by : Department of Tamil (Aided and Self-finance course)
- Date : 12/09/2025
- Time : 10:30 AM - 12:30 PM
- Venue : Sri Subburaj memorial AC Hall
- Type : Seminar
பாரதியார் நினைவுநாள் கருத்தரங்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு அரசு உதவிபெறும் பிரிவுடன் இணைந்து 12.09.2025 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கான வரவேற்புரை முனைவர் லெ.அலமேலு உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அவர்கள் வழங்கஇ விழாவினை தலைமையேற்று தலைமையுரை வழங்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் அவர்கள். நிகழ்வின் முன்னிலை உரையினை சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுரேஷ்குமார் அவர்கள் ஆற்றிட சிறப்புரையாளர் அறிமுக உரையினை தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் நா.பால்பாண்டி அவர்கள் வழங்கினார். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் திரு கவிஞர் சோ.பாரதன் அவர்கள் தமது சிறப்புரையை சீர்மிகு உரையாக மாற்றிட அரசு உதவிபெறும் பிரிவு தமிழ்த்துறை பேராசிரியர் மீனா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வின் முந்தைய நாள் பாரதியார் இலக்கிய பேச்சுப் போட்டி கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப் போட்டி கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிகழ்வு அன்று சிறப்பு விருந்தினரால் கெளரவிக்கப்பட்டு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
Resource Person(s)
கவிஞர் சோ.பாரதன்
பாரதி இலக்கியப் பேரவை நிறுவனர் மற்றும் தலைவர்
கம்பம்.
Organising Committee
தமிழ்த்துறை (அரசு உதவிபெறும் பிரிவு மற்றும் சுயநிதிப்பிரிவு)
