A Five Day Free Workshop on Production of Banana Value Added Products (ஐந்து நாள் வாழைநார் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான இலவசப் பயிற்சிப் பட்டறை)

  • Organised by : Entrepreneurship Development Centre - CPA College and Kavin Eco Green Products - Theni.
  • Date : 14/08/2024 - 18/08/2024
  • Time : 10.00 AM - 5.00PM
  • Venue : C.P.A College, Subburaj Memorial AC Hall
  • Type : Workshop
  • Level : State Level

ஐந்து நாள் வாழைநார் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான இலவசப் பயிற்சிப் பட்டறை

14.08.2024 முதல் 18.08.2024 வரை

வாழைநார் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான இலவச பயிற்சிப் பட்டறைக்கான அழைப்பிதழ்.

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு வாழைநார் பொருட்கள் தயாரிக்கும் எமது துறை மாணவியர்கள்.

வாழைநார் பயிற்சி வகுப்பில் தாங்கள் செய்த கைவினைப் பொருட்களுடன் மேடையேறிய மாணவியர்களுடன் தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவியர்கள் கமலி, நாகதர்ஷிணி மற்றும் தேன்மொழி ஆகியோர்.

வாழைநார் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா நிகழ்ச்சியில் கவின் எக்கோ கிரீன் ப்ராடக்ட் நிறுவனர் மற்றும் ஊழியர்கள், சுயதொழில் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரிப் பேராசியரியர்களுடன் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களின் குழுப் புகைப்படம்

Report

நமது கல்லூரி சுப்புராஜ் நினைவு குளிர்மை அரங்கில் 14.08.2024 முதல் 18.08.2024 வரை வாழைநார் மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்களின் ஐந்துநாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 56 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சிறப்பாக பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு கவின் எக்கோ கிரீன் ப்ராடக்ட் நிறுவனத்தின் சார்பாக இலவசப் வாழைநார் மற்றும் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுஇ தங்கள் நிறுவனத்தின் முழு ஒத்துழைப்புடன் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை; தயார் செய்யும் இடங்களுக்கே சென்று வாங்குவதென ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வினை கல்லூரி சுயவேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.கிருஷ்ணகுமார் அவர்கள் வெகுசிறப்பாக செய்திருந்தார். கல்லூரி நிர்வாகம்இ முதல்வர்இ பேராசியரியர்கள் மற்றும் அலுவலர்கள் பயிற்சிப் பட்டறை சிறப்புடன் அமைந்திட தேவையான ஆக்கப்பணிகளை செய்திருந்தனர். இப்பயிற்சி வகுப்பில் தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவிகள் தேன்மொழிஇ நாகதர்ஷிணி மற்றும் கமலி ஆகியோரும்; இரண்டாமாண்டு மாணவர்கள் விஷ்ணுஇ குமார் மற்றும தனஞ்ஜயன் ஆகியோரும் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை சிறப்பாக நிறைவு செய்தனர். மாணவி நாகதர்ஷிணி சிறப்பு மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resource Person(s)

கவின் எக்கோ கிரீன் ப்ராடக்ட் நிறுவனர் மற்றும் ஊழியர்கள், தேனி.

Organising Committee

Entrepreneurship Development Centre - CPA College and Kavin Eco Green Products - Theni.