Initiatives

கருத்தரங்குகள்:
ஆண்டுகள் தோறும் தவறாது கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் கருத்தரங்கின் எண்ணிக்கையைக் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய மன்றம்:
தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவிற்கென தனிப்பட்ட மன்றம் இல்லாத நிலையில் “தமிழ் இலக்கிய மன்றம்” என்னும் பெயரில் மன்றம் இக்கல்வியாண்டில் (2024-2025) தொடங்குவதென ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

பயிற்சிப்பட்டறை:
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய பயிற்சிப்பட்டறைகள் நடத்துவது, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் கல்வெட்டியியல், தொல்லியல், ஓலைச்சுவடி, இதழியல், தகவல்தொடர்பியல், சினிமா, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைத்துறையில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித்த பயிற்சிப் பட்டறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வு வெளியீடுகள் மற்றும் ஆய்வு மாநாடுகள்:
வரும் காலங்களில் அதிகப்படியான ஆய்வுக்கட்டுரைகளை அங்கிகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் பேராசிரியர்கள் வழங்கிட அறிவுறுத்தல். புதிய முயற்சியாக ஆய்வு மாநாடு ஒன்றினை நடத்திவும் ஆசிரியர் கலந்தாய்வில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதுகலைப் பாடப்பிரிவு:
அரசு நிர்ணயித்த கல்வித்தகுதியுடைய துறைப் பேராசிரியாகள் அதிகம் இருப்பதால்; அடுத்த கல்வியாண்டில் முதுகலைத் தமிழ்த்துறை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளைச் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. துறைப் பேராசிரியர்களில் பலரும் முனைவர் பட்டம் பெற்றுள்ளமையால்; வரும் காலங்களில் ஆராய்ச்சித்துறையாகவும் மாற்றிடும் எண்ணமும் உண்டு.