மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துதல், படைப்பாற்றல் திறனை வளர்த்தல், பண்பாட்டுக் கூறுகளை அறிமுகம் செய்தல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை அரங்கேற்றம் செய்தல் போன்றனவற்றை “வியாழவட்டம்” என்னும் நிகழ்வின் மூலம் நடத்தி வருகின்றோம். இந்நிகழ்வானது வாரந்தோறும் நான்காவது பாடநாளில், ஐந்தாவது பாடவேளையில் இடைவிடாது நடந்தேறி வருகின்றது. 50வது வியாழ வட்டம் நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில்; தற்போது 75வது நிகழ்வினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞன். தமிழுக்கு முப்பெரும் படைப்புகளை தந்த மகாகவி பாரதியின் நினைவு நாளை மாணவர்கள் நினைவு கூர்ந்திடும் வகையில்; ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் நாள் “பாரதியார் நினைவுநாள் கொண்டாட்டம்” சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, பாரதியார் கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் கருத்தரங்கு ஆகியன நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் கற்றல் திறனை எளிமையாக்கிடும் வகையில்; பாடத்திட்டம் சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் “கல்விச்சுற்றுலா” அழைத்துச் செல்லப்படுகிறது.
திறமையான மாணவர்களைக் கண்டறிந்து; கல்லூரிக்கு இடையில் நடைபெறும் போட்டிகள், அரசு சார்ந்த விழாக்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.