About Department

பொன் குடத்திற்கு பொட்டு வைத்தார் போல; கல்லூரி வரலாற்றில் முதன் முதலாக 2019-2020 ஆம் கல்வியாண்டில், இளங்கலைத் தமிழ்த்துறை (B.A., Tamil) சுயநிதிப்பிரிவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைப்புடன் தொடங்கப்பட்டது. 20 மாணவர்கள் 3 பேராசிரியர்கள் என தொடங்கிய கல்விப் பயணம்; தற்போது 50க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட பேராசிரியர்கள் ஐவர்; சிறப்பான கல்விப் பணியினை மாணவச் சமுதாயத்திற்கும், கல்லூரிக்கும் செய்து வருகின்றனர்.

துறைத்தலைவர் காலவரிசையில்: (Leadership Timeline)

முனைவர் நா.பால்பாண்டி (2019 முதல்):  தற்பொழுதைய துறைத்தலைவரான முனைவர் நா.பால்பாண்டி அவர்கள், தற்கால கல்விச்சூழலுக்கு ஏற்ற வகையில் கற்றல் திறனை வளர்த்தெடுத்தல், படைப்பாற்றல் திறனை ஊக்கப்படுத்துதல் என மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறையும், துறையின் நீடித்த நீண்ட வளர்ச்சியை கவனத்தில் கொண்டும் செயல்பட்டு வருகிறார்.

Head of the Department
Dr. N. Palpandi., M.A., M.Phil., Ph.D.,
Assistant Professor and Head
ஒரு வளமான நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது அந்நாட்டின் தாய்மொழிக் கல்விதான். தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாகவும் இருக்கின்றது. தாய்மொழியின் சிந்தனை மூலமே ஒருவன் தலைசிறந்த ஒழுக்கவாதியாகவும், படைப்பாளனாகவும், வெற்றியாளனாகவும் சிறந்து விளங்கமுடியும். நல்ல அறிவையும், திறன்களையும் வளர்த்தெடுப்பதில் உலகின் மூத்தமொழியாம் தமிழைத் தவிர இவ்வுலகில் வேறு மொழியுமுண்டோ…!? ஆகவே, வாழ்க்கையின் விழுமியங்களை எடுத்துரைத்து, உயர்ந்த வெற்றிகளை அடைந்திடத் துடிக்கும்; ஆரோக்கியமான சமூகத்தை வளர்த்தெடுப்பதில் உறுதிபூண்டுள்ள எங்கள் துறையோடு உங்களின் லட்சியப்பயணம் தொடங்கட்டும். வாருங்கள் புதிய சமுதாயம் படைத்திடுவோம்
Notifications & Announcements

1974

Established

1

Programme

6

Faculty

14

University Rank Holders

14

Events