World Women's day Celebration (உலக மகளிர் தின கொண்டாட்டம் - சிறப்பு பட்டிமன்றம்)

உலக மகளிர் தின கொண்டாட்டம் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் காலேஜ்  மகளிர் மையத்தின் சார்பாக மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மாணவியர்களுக்கான கோலப் போட்டிஇ மெகந்தி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சிறப்பு பட்டிமன்றம் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு சார்பாக நடத்தப்பட்டது. இதில் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு துறைத்தலைவர் முனைவர் நா.பால்பாண்டி அவர்கள் பட்டிமன்ற நடுவராக இருந்து நிகழ்விற்குத் துணை நின்றார். மேலும் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் சே. மாசிலாமணி மற்றும் க. தனலெட்சுமி ஆகியோர் இரு அணிகாளாக பிரிந்து நின்று "மனித வாழ்வினைச்  செம்மைப் படுத்துவது அறிவா? அனுபவமா?" என்ற தலைப்பில் வாதாடினர். இரு அணிகளிலும் இளங்கலை மற்றும் முதுகலை  மாணவியர்கள் அணிக்கு இருவர் என பிரிந்து நான்கு நபர்கள் தத்தமது அணி வெற்றிபெற திறமையாக வாதாடினர். இந்நிகழ்வில் மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் உற்பட மாணவியர்கள் அநேகமானோர் கலந்து கொண்டு நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.